சிறுவர்களுக்கான ஒரு கதை

காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது, ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.
"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், என்ன உபாயம்? கேவலம், இந்த காட்டு சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்க வைக்கிறது. இப்படி பயந்து கொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கைய? எண்டு நொந்து கொண்டு இருந்தது.

அதே சமயம், அங்கே ஒரு யானை மிகவும் கவலையுடன் தன் காதுகளை மூடிக்கொண்டு நகர்ந்தது.

அதை பார்த்த சிங்கம் " ஏய்..... ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து fight பண்ண மாட்டார்களே! உன் உடலைப்பர்த்தாலே, எல்லா animals உம் பயந்து ஓடுமே.. why are you sad jambo?" என்று கேட்டது.
அதற்கு யானை சொன்னது " இதோ... என் காது பக்கத்தில் பறக்கும் குளவியை பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால் என் உயிரே போய்விடும், அதுதான் காதுகளை மூடிக்கொண்டு கவலையுடன் செல்கிறேன்" என்றது.

அது கேட்டு சிங்கம் யோசித்தது. " இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது எண்டு நினைத்தால், அதுகூட கவலைப்படுகிறதே! அப்படியானால், world இல் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் எதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!
கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை, கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோசமாக வாழ முடியாமல் போய் விட்டழே!" என்று அது புரிந்துகொண்டது.

அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத்தொடங்கியது.

No comments:

Post a Comment